தமிழகம்

மூன்றுமுறை வீட்டிலிருந்து ஓட்டம்! தூக்கில் தொங்கிய 9ம் வகுப்பு மாணவி! அடுத்த அடுத்ததாக வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!

Summary:

14 old child ran twice from house in bobhal

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வசித்து வருபவர் ராதிகா. 14 வயது நிறைந்த இவர் அப்பகுதியில் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ராதிகாவின் தாய் மற்றும் தந்தைக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவரது தந்தை கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிரிந்து தனியாக சென்று விட்டார். இதனைத்தொடர்ந்து ராதிகா அவரது தாயுடன் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் ராதிகாவிற்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து இருவரும் அடிக்கடி சந்தித்து பேசுவது, வெளியே செல்வது என இருந்து வந்துள்ளனர். இதுகுறித்து தெரியவந்த நிலையில் ராதிகாவின் தாய் அவரை கண்டித்துள்ளார். மேலும் அந்த இளைஞரிடம் பேச கூடாது எனவும் மிரட்டியுள்ளார்.

ஆனாலும் அதனை பொருட்படுத்தாத ராதிகா தொடர்ந்து அந்த இளைஞனிடம் பேசி வந்துள்ளார்.இதனைக் கண்ட ராதிகாவின் தாய் மீண்டும் அவரை கடுமையாக  திட்டியுள்ளார். இந்நிலையில் பிடிவாத குணம் நிறைந்த ராதிகா ஆத்திரம் அடைந்து அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைக் கண்ட ராதிகாவின் தாய் அதிர்ச்சியில் கதறி துடித்துள்ளார்.

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராதிகாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தொடர்ந்து அவர்கள் விசாரணை மேற்கொண்டபோது ராதிகா இதற்கு முன்பு மூன்று முறை வீட்டை விட்டு ஓடியுள்ளதும், பின்னர் அவரது தாய் பல இடங்களில் தேடி கண்டுபிடித்து மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்ததும் தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement