தமிழகம்

கொரோனா பரிசோதனை செய்தாலே அந்த நபர் உட்பட மொத்த குடும்பமும் 14 நாட்கள் கட்டாயம் தனிமை..! சென்னை மாநகராட்சி..!

Summary:

14 days quarantine is mandatory for corono test patients

கொரோனா பரிசோதனை செய்துகொண்டாலே பரிசோதனை செய்துகொண்டவர் மற்றும் அவரது குடும்பத்தினர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் இன்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் அனுமதி பெற்ற பரிசோதை மையங்களின் பிரதிநிதிகளுடன் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், சென்னையில் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும் நபர் மற்றும் அவரது குடும்பத்தினர் 14 நாட்கள் கட்டாயம் தனிமை படுத்தப்படுவார்கள் என தெரிவித்தார்.

சென்னையில் 12 அரசு பரிசோதனை மையங்கள், 18 தனியார் பரிசோதனை மையங்கள் இருப்பதாகவும், இங்கு பரிசோதனை மேல்கொள்பவர்களின் பெயர், பாலினம், தொழில், முகவரி, குடும்பத்தினர் குறித்த விவரங்களை பரிசோதனை மையங்கள் உடனே மாநகராட்சிக்கு தெரியப்படுத்தவேண்டும் எனவும் கூறினார்.

மேலும் கொரோனா பரிசோதனை மையங்கள் அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படவேண்டும் எனவும், வீடுகளுக்கு சென்று பரிசோதனை மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவேண்டும் எனவும் ஆலோசனை கூடத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Advertisement