தமிழகம் Covid-19

பிறந்து 14நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா பாதிப்பு! அதிர்ச்சி தகவல்!

Summary:

14 days child affected by corona

தமிழகத்தில் பிறந்து 14 நாளேயான பச்சிளம் குழந்தை உள்பட மேலும் 231 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் சென்னையில் கொரோனா வைரசின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் சென்னையில் 174 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 231 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,757 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 1,828 ஆண்களும், 928 பெண்களும், ஒரு திருநங்கையும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நேற்று ஒருவர் உயிரிழந்த நிலையில் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த 14 நாள் பெண் குழந்தைக்கு நேற்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தமிழகத்தில்  மேலும் 8 குழந்தைகளுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 6 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Advertisement