கல்யாணம் எப்போ?? குட் நியூஸ் சொன்ன பிக்பாஸ் அருண்.! ரசிகர்கள் வாழ்த்து!!
தனியார் பள்ளிகளை போன்று இனி அரசு பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்பு.! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.
கொரோனா என்னும் கொடிய நோயானது தற்போது இந்தியா முழுவதும் பரவி மக்களை நாளுக்கு நாள் அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்நோயிலிருந்து மக்களை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அதிகம் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பது என்பது சற்று முடியாத செயலாக இருந்து வருகிறது. இதனால் பல தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வருகின்றனர்.
இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்பு நடத்துவது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வரும் 13 ஆம் தேதி முதல் தனியார் பள்ளிகளை போன்று அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.