தமிழகம்

பாவங்க அந்த பையன்!! 13 வயசுதான் ஆகுது!! சேற்றில் சிக்கி 9 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்பு!!

Summary:

ராமநாதபுரம் அருகே சேற்றில் சிக்கிய 13 வயது சிறுவன் 9 மணிநேர போராட்டத்திற்கு பிறகு சடலமாக ம

ராமநாதபுரம் அருகே சேற்றில் சிக்கிய 13 வயது சிறுவன் 9 மணிநேர போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மல்லல் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது 13 வயது மகன் சுகனேஷ். சுகனேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து அதே கிராமத்தில் உள்ள கண்மாய் அருகே இருக்கும் கிணற்றுக்கு  குளிக்கச் சென்றுள்ளான். நண்பர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக குளித்துக்கொண்டிருந்துள்ளனர்.

அப்போது சுகனேஷ் கிணற்றின் அருகே இருந்த சிமெண்ட் தரை மீது நின்றுகொண்டிருந்துள்ளான். தொடர் மழை காரணமாக அந்த சிமெண்ட் தரையானது வலுவிழந்து காணப்பட்டநிலையில், திடீரென சிமெண்ட் தரை உடைந்து அதனால் உருவான பள்ளத்தில், சிறுவன் சுகனேஷ் எதிர்பாராதவிதமாக தடுமாறி விழுந்து சேற்றில் சிக்கிக் கொண்டான்.

அங்கிருந்தவர்கள் சிறுவனை மீட்கும் முயற்சில் ஈடுபட்டு எந்த பலனும் இல்லை. பின்னர் இந்த தகவல் தீயணைப்பு துறைக்கு தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சேற்றில் சிக்கிய சிறுவனை மீட்கப் போராடினர். ஆனால் 9 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இன்று அதிகாலை இரண்டரை மணி அளவில் அச்சிறுவனை சடலமாகவே மீட்க முடிந்தது.

பின்னர் சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்கா மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement