அடுத்ததாக தொடரும் சோகம்.! விருத்தாச்சலத்தில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை.!

அடுத்ததாக தொடரும் சோகம்.! விருத்தாச்சலத்தில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை.!


12'th student commit suicide

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு  மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சோகம் மக்கள் மனதில் இருந்து நீங்குவதற்குள் நேற்று திருவள்ளூர் அருகே பள்ளி விடுதியில் 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் அருகே மப்பேடு அடுத்த கீழசேரியில் 'சேக்ரட் ஹார்ட்' பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி சரளா நேற்று விடுதி அறையில் இருந்த மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தற்கொலைக்கான காரணம் தெரிந்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என மாணவியின் உறவினர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த சோகம் மறைவதற்குள் விருத்தாச்சலத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனையடுத்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மாணவிக்கு இறுதிச்சடங்கு செய்ய முற்பட்டபோது தடுத்து நிறுத்திய போலீசார். மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சரியாக படிக்க முடியவில்லை என மாணவி மன உளைச்சலில் இருந்ததாகவும், நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் பெற்றோர்கள் தெரிவித்தனர். மேலும், வீட்டில் இருந்த மூன்று பக்க கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.