தமிழகம்

நடுராத்திரியில் தங்கச்சி ரூமில் கேட்ட அலறல் சத்தம்.. பதறி அடித்து ஓடிய அக்கா கண்ட கொடூர காட்சி.!

Summary:

12th standard girl commit suicide for poor performance in physics exam

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே உள்ள பெரியவிளை பகுதியை சேர்ந்தவர் தங்க மாயன். முறுக்கு வியபாரம் செய்துவரும் இவருக்கு பிரதீஷா (18), தீபிகா (17) என இரண்டு மகள்களும், சர்வே‌‌ஷ் பாண்டி (10) என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில், வேலை விஷயமாக தனது மனைவியுடன் தங்கமாயன் வெளியூர் சென்றநிலையில், அவர்களது பிள்ளைகள் மட்டும் தனியே வீட்டில் இருந்துள்ளனர். இந்நிலையில், 12 ஆம் வகுப்பு படித்துவரும் தீபிகா, சமீபத்தில் நடந்து முடிந்த இயற்பியல் தேர்வை சரியாக எழுதவில்லை என்ற மனஉளைச்சலில் இருந்துள்ளார்.

இதுகுறித்து தனது அக்காவிடம் அழுது அழுது புலம்ப, அதெல்லாம் சரியாகிவிடும், தேர்வில் உனக்கு நல்ல மதிப்பெண்கள் வரும் என அக்கா பிரதீஷா தங்கை தீபிகாவுக்கு ஆறுதல் கூறியுள்ளார். இதனிடையே, தனக்கு தூக்கம் வருவதாக கூறிவிட்டு தீபிகா அவரது அறைக்கு தூங்க சென்றுள்ளார்.

இந்நிலையில், நள்ளிரவில் தீபிகாவின் அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்க, பிரதீ‌ஷா தீபிகாவின் அறைக்கு ஓடிச்சென்று பார்த்துள்ளார். அங்கு தங்கை தீபிகா தூக்கில் சடலமாக தொங்கி கொண்டிருப்பதை பார்த்து கதறி துடித்தார். பிரதீஸாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், தீபிகாவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துசென்றுள்ளனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தேர்வு கடினமாக இருந்ததால் பிளஸ்-2 மாணவி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement