தமிழகம்

6 அடி பள்ளம்..! இடையில் சிக்கிக்கொண்ட உடல், தலை..! வெளியே தெரிந்த கை..! போராடிய சிறுவனை உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறையினர்.!

Summary:

12 years old boy struck in 6 feet crater

ஆடுமேய்க்க சென்ற சிறுவன் தவறி விழுந்த செல்போனை எடுக்கும் முயற்சியில் மிகவும் குறுகலான 6 அடி பள்ளத்துக்குள் சிக்கிக்கொண்ட நிலையில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி சிறுவனை உயிருடன் மீட்டனர்.

திருச்சி மாவட்டம் தாத்தையங்கார்பேட்டை அருகே உள்ள ஜமுனாதபுரத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் ஆத்தியா தனது வீட்டில் உள்ள ஆடுகளை அருகில் உள்ள மலை பகுதிக்கு மேய்ச்சலுக்காக அழைத்துசென்றுள்ளார். ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது சிறுவனின் செல்போன் கைதவறி அங்கிருந்த பாறையின் உள்ளே விழுந்துள்ளது.

இதனை அடுத்து தவறி விழுந்த செல்போனை எடுக்க ஆத்தியா முயற்சித்துள்ளார். இந்த முயற்சியில் சிறுவன் கால் தவறி மிகவும் குறுகலான 6 அடி பள்ளத்தில் விழுந்துள்ளன. சிறுவனின் உடல் பள்ளத்தில் இருந்த இடைவெளியில் சிக்கிக்கொண்ட நிலையில் அவனால் பள்ளத்தில் இருந்து வெளியே வர முடியவில்லை.

இதனிடையே நீண்ட நேரமாகியும் ஆதியாவை காணாத அவனது நண்பர்கள் அவரை தேடி அங்கு சென்றுள்ளனர். அப்போது ஆதித்யா பள்ளத்தில் மாட்டிக்கொண்டதை கண்டு ஊர் மக்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் இந்த தகவல் அந்த பகுதி போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்த அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி ஆதித்யாவை உயிருடன் மீட்டனர்.

பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிறுவன் அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement