தமிழகம்

கை கால்கள் செயலிழந்த தந்தை..! தெரு தெருவாக வடை விற்று தனது குடும்பத்தை காப்பாற்றும் தமிழ் சிறுவன்..! நெஞ்சை உலுக்கும் சம்பவம்.!

Summary:

12 years old boy earning for his poor family

12 வயது சிறுவன் ஒருவன் தினமும் 10 கிலோ மீட்டர் வரை சைக்கிளிலேயே சென்று வடை, சமோசா போன்ற பலகாரங்களை விற்று தனது குடும்பத்தை காப்பாற்றிவரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் அருகே உள்ளது மானோஜிப்பட்டி எனும் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள  உப்பரிகை என்ற பகுதியை சேர்ந்தவர் வரதராஜன். இவருக்கு 5 வயதில் ஒரு மகள், 12 மற்றும் 8 வயதில் இரண்டு மகன்கள் என மூன்று மகன்கள் உள்ளனர். கொத்தனார் வேலைபார்த்துவந்த வரதராஜன் திடீரென நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டார்.

இதனால் குடும்பம் வருமானம் இன்றி தவித்துள்ளது. இதனால் கிடைத்த சிறு சிறு வேலைகளை செய்து வரதராஜன் மனைவி சுமதி வீட்டிலிருந்தபடியே சமாளித்துள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவு சுமதியை கடுமையாக பாதித்துள்ளது.

வருமானம் இல்லாததால் தனது கணவன் மற்றும் பிள்ளைகளை பார்த்துக்கொள்ள பணம் இல்லாமல் தவித்துள்ளார். குடும்பத்தின் நிலையை அறிந்த முதல் மகன் தான் வேலைக்கு செல்வதாக கூறியுள்ளார். ஆனால் சுமதி அதற்கு மறுப்பு தெரிவித்து போண்டா, வடை, சமோசா போன்ற பலகாரங்கள் செய்து தருவதாகவும் அதை விற்றுவருமாறும் கூறியுள்ளார்.

இதனை அடுத்து 12 வயது சிறுவன் விஷ்ணு தனது தாய் செய்துதரும் பலகாரங்களை சைக்கிளில் கொன்றுசென்று விற்று அதன்மூலம் தினமும் 100 ரூபாய் சம்பாதித்து தனது குடும்பத்தை காப்பாற்றிவருகிறான்.


Advertisement