திடீரென காலுக்கு அடியில் வழுவழுவென ஒரு உணர்வு..! கொஞ்சம் மிஸ் ஆயிருந்த அம்புட்டுதான்..! அலறி ஓடிய தேயிலை தொழிலாளி.!

திடீரென காலுக்கு அடியில் வழுவழுவென ஒரு உணர்வு..! கொஞ்சம் மிஸ் ஆயிருந்த அம்புட்டுதான்..! அலறி ஓடிய தேயிலை தொழிலாளி.!


12 feet rock snake found in neelagiri

தேயிலை தோட்டத்தில் வேலைபார்த்தபோது 12 அடி நீளம் மலைப்பாம்பு காலில் மிதிப்பட்ட சம்பவம் நீலகிரி மாவட்டத்தில் நடந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தேயிலை தோட்டத்தில் தேயிலை தொழிலார்கள் சிலர் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தொழிலாளர் ஒருவர் தேயிலை பறித்துக்கொண்டிருந்தபோது அவரது கால்களில் ஏதோ வழுவழுவென பட்டுள்ளது. உடனே பதறிப்போய் தேயிலைகளை விலகி பார்த்தபோது மிகப்பெரிய மலைப்பாம்பு ஒன்று வளைந்து நெளிந்து ஊர்ந்து சென்றுள்ளது.

snake

இதனை பார்த்து அந்த தொழிலாளி அலறவே சக தொழிலாளிகளும் தேயிலை தோட்டத்தில் இருந்து வெளியேறியுள்ளனர். பின்னர் இந்த தகவல் பந்தலூர் வனத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் தேயிலை தோட்டத்திற்குள் இருந்த 12 அடி நீள மலைப்பாம்பை பிடித்தனர்.

பின்னர் அந்த பாம்பை ஒரு சாக்கு பைக்குள் போட்டு காட்டு பகுதிக்குள் அதிகாரிகள் விட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.