தேர்வு சரியாக எழுதவில்லை என்பதால் 10ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு.! சோக சம்பவம்.!

தேர்வு சரியாக எழுதவில்லை என்பதால் 10ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு.! சோக சம்பவம்.!


10'th student suicide in pattukottai

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த சூரிய பாண்டி என்பவரின் மகள் யோகேஸ்வரி. இவர், பட்டுக்கோட்டையில் உள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், தேர்வெழுதிவிட்டு பள்ளியில் இருந்த வீட்டுக்கு வந்த அவர், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சரியாக எழுதவில்லை என மன உளைச்சலில் பேசிக்கொண்டிருந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று அவரது வீட்டில் தூக்கில் தூங்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவியின் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.