தமிழகம்

வயிறுவலியால் துடித்த 10 ஆம் வகுப்பு மாணவி! பரிசோதனையில் பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.

Summary:

10th standard student affair with 11 standard student

விருதுநகர் மாவட்டம் திருச்சூழி சித்தலக் குண்டு என்னும் கிராமத்தை சேர்ந்தவர் மாணவி நிலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அங்கிருக்கும் உயர்நிலை பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களாக மாணவி தொடர்ந்து வயிறு வலிப்பதாக கூறிவந்துள்ளார்.

இதனால் மாணவியின் பெற்றோர் அவரை மருத்துவரிடம் அழைத்து சென்றுள்ளார். மாணவியை சோதித்த மருத்துவர்கள் பெற்றோரிடம் மிகப்பெரிய அதிர்ச்சியான செய்தியை கூறினர். மாணவி 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதற்கு யார் காரணம் என மாணவியிடம் கேட்க அவர் யாரென கூற மறுத்துள்ளார்.

இதனால் இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, மாணவியை போலீசார் விசாரித்துள்ளனர். அவர்கள் விசாரணையில் உண்மையை கூறிய மாணவி, தனது கிராமத்தில் இருக்கும் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனுடன் தொடர்பு இருப்பதாகவும், இருவரும் காதலித்து வந்த நிலையில் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாகவும் கூறியுள்ளார்.

இதனை அடுத்து அந்த மாணவனை கைது செய்த போலீசார் மாணவி 18 வயதுக்கு உட்பட்டவர் என்பதால் அந்த மாணவனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தியுள்னனர். இந்த சமப்வம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement