திடீரென தூக்கில் தொங்கிய 10-ஆம் வகுப்பு மாணவி.. அறையின் கதவை திறந்த தாய்க்கு பேரதிர்ச்சி..! 

திடீரென தூக்கில் தொங்கிய 10-ஆம் வகுப்பு மாணவி.. அறையின் கதவை திறந்த தாய்க்கு பேரதிர்ச்சி..! 


10th class student who suddenly hanged herself

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அன்னமங்கலம், வேப்பந்தட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரின் மகள் பிரதிஷா (வயது 15). இவர் அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் நேற்று அவர் தனது அறையில் இருந்தார். 

பின்னர் காலை மகள் நீண்ட நேரமாகியும் எழுந்து வராததால் அறையின் கதவை தாய் திறந்து பார்த்தபோது மகள் தூக்கிட்டு நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

Perambalur District

அத்துடன் அவரின் சத்தம் கேட்டுவந்த அக்கம்பக்கத்தினர் சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின் பிரதிஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்த நிலையில் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.