10,+2 மாணவர்களின் சுயவிவரம் திருட்டு.. ரூ.3,000, ரூ.5,000-க்கு விற்பனை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம்..!!



10th 12th Class students Data Sales Issue

தனிநபர் தகவலை திருடுவதும், விற்பனை செய்வதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளியில் படித்துவரும் 20 மாவட்டங்களைச் சார்ந்த பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் சுய விபரங்கள்-ஆனது பணத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பெரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

மதுரை, திருச்சி, விருதுநகர் உட்பட 20 மாவட்டங்களை சார்ந்த 12-ஆம் வகுப்பு மாணவர்களின் சுயவிபரங்கள் ரூ.5,000 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் சுயவிபரம் ரூ.3000 என விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 

tamilnadu

இந்த நிலையில் முக்கிய புள்ளிகளுக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும், இந்த தகவலை வைத்து அவர்கள் என்ன செய்தார்கள் என்பது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.