தமிழகம் Covid-19

கொரோனாவிலிருந்து மீண்ட 103 வயது முதியவர்! கெத்து காட்டும் திண்டுக்கல் தாத்தா!

Summary:

103 years old man recovered from corona

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸால் பெரும்பாலும் முதியோரும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களும், இதயம் மற்றும் நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டவர்களும்தான் கொரோனா தொற்றிக்கொண்டால் உயிரிழக்க நேரிடுகிறது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 103 வயது முதியவர் சரவணன் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்தநிலையில் 103 வயது முதியவர் சரவணன் பூரண குணமடைந்து தற்போது வீடு திரும்பியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய்தொற்று நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதில் இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் மட்டும் 203 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றுவரை திண்டுக்கல்லில் கொரோனா மொத்தபாதிப்பு 2318 ஆக உள்ளது. இதில் 1683 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பூரண குணமடைந்து வீடு திரும்பிய 103 வயது முதியவர் சரவணனை மருத்துவமனை ஊழியர்கள் வழி அனுப்பி வைத்தனர்.


Advertisement