தமிழகம்

தேசிய நெடுஞ்சாலையில் கோரவிபத்து! ஒரே கிராமத்தை சேர்ந்த 10 பேர் பலி! கண்ணீர்விட்ட மாவட்ட ஆட்சியர்!

Summary:

10 people died in accident

கர்நாடகாவின் தும்கூர் அருகே சாலையோரம் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேரும், மொத்தம் 13 பேரும் பலியாகினர்.


கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டம் குனிகல் அருகே நடந்த சாலை விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.  இதில், 10 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.  ஓசூர் அருகே உள்ள சீக்கணப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 14 பேர் கர்நாடகாவில் உள்ள தர்மஸ்தாலா கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் முடித்துவிட்டு ஊருக்கு திரும்பியபோது இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் ஆவரைக்கல் என்ற இடத்தில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் காரில் வந்தபோது எதிர் திசையில் இருந்து வந்த மற்றொரு கார் கட்டுப்பாட்டை இழந்து இவர்கள் வந்த கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த பயங்கர விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். 

அதேபோல் எதிரே வந்த காரில் இருந்த  3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 10 பேர் கார் விபத்தில் உயிரிழ்ந்ததால் சீக்கனப்பள்ளி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்த விபத்தில் மொத்தம் 13 பேர் பலியாகி உள்ளனர்.

சம்பவ இடத்தில உயிரிழந்த உடல்கள் சீக்கணப்பள்ளி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு 10 பேர் உடல்களுக்கு அஞ்சலி செலுத்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர் வந்திருந்தார். அங்கு இறந்தவர்களின் உறவினர்கள் அலுவதைப்பார்த்து மாவட்ட ஆட்சியரும் அழுதுள்ளார். 

இந்தநிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்ச ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிதி உதவி அளித்துள்ளார்.


Advertisement