தமிழகம்

கொரோனா கோரதாண்டவத்திற்கு இடையே தமிழகத்திற்கு வந்த நல்ல செய்தி!

Summary:

10 month baby recovered from corrnovirus

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது 190க்கு மேற்பட்ட நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது.  மேலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருக்கிறது.

 இந்நிலையில் தமிழகத்தில் கொரோனோவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 621ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டு கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த 10 மாத குழந்தை உட்பட 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா பாதிக்கப்பட்டு 
முதலாவதாக சிகிச்சைக்கு  அனுமதிக்கப்பட்ட 25 வயது பெண் மாணவியும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் ராசாமணி தகவல் வெளியிட்டுள்ளார். மேலும், குணமடைந்து வீட்டிற்கு அனுப்பப்பட்ட 5 பேரும் 14 நாட்கள் தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 


Advertisement