முழு ஊரடங்கை பயன்படுத்தி டாஸ்மாக் கடையில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்.! ரூ.10 லட்சம் அபேஸ்.!

முழு ஊரடங்கை பயன்படுத்தி டாஸ்மாக் கடையில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்.! ரூ.10 லட்சம் அபேஸ்.!



10 lakh robbery by breaking Tasmac shutter

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.  இதனால் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்தநிலையில், கோவை மாவட்டம் லாலி சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில்  சனிக்கிழமை வசூலான 10 லட்ச ரூபாய் பணத்தை கடையில் வைத்துவிட்டு ஊழியர்கள் வீட்டிற்கு சென்றனர். ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கடந்த சனிக்கிழமை அதிகப்படியான மதுவிற்பனை நடந்துள்ளது.

இந்தநிலையில், ஞாயிற்று கிழமை டாஸ்மாக் கடை விடுமுறை என்பதால் ஊழியர்கள் வீட்டுக்கு சென்றுவிட்டனர். இதனையடுத்து திங்கள் கிழமை கடையை திறக்க சென்ற போது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து பதட்டத்துடன் உள்ளே சென்று பார்த்து போது கல்லாவில் வைத்திருந்த ரூ.10 லட்சம் பணம் மற்றும் 1 லட்ச ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டனர், மேலும், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.