தமிழகம் இந்தியா

தாயின் தூக்கத்தால் காரில் இருந்து நடு காட்டில், நள்ளிரவில் தவறி விழுந்த குழந்தை! நெஞ்சை உறையவைக்கும் சம்பவம்.

Summary:

1 year old baby falls out of moving car video

கேரளாவின் இடுக்கி பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பழனிக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு இரவு நேரத்தில் பழனியில் இருந்து கிளம்பி மீண்டும் கேரளாவிற்கு காரில் சென்றுள்ளனர். கார் அடர்ந்த காட்டு பகுதியில் பயணித்துள்ளது.

இதில் காரில் இருந்த அனைவரும் அயர்ந்து தூங்கியுள்ள நிலையில் தாயின் மடியில் விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயது பெண் குழந்தை ஓன்று ஜன்னல் வழியே எட்டி பார்த்ததில் காரில் இருந்து கீழே விழுந்துள்ளது. காரின் ஓட்டுநர் உட்பட யாரும் இதனை கவனிக்காமல் சுமார் 40 கிலோமீட்டர் கடந்து வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அதன்பின்னரே குழந்தை காணவில்லை என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். இதனிடையே காரில் இருந்து கீழே விழுந்த குழந்தை அங்கிருந்து எழுந்து தவழ்ந்து வந்து அருகில் இருந்த முள் வேலியின் அருகே நின்று அலுத்துள்ளது. நடுக்காட்டில் குழந்தை ஓன்று அழுவதை கண்காணிப்பு கேமிரா மூலம் அங்கிருந்த ஊழியர்கள் பார்த்துள்னனர்.

இதனை அடுத்து வனத்துறை அதிகாரிகளும், போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து விரைந்துவந்த அதிகாரிகள் காயத்துடன் இருந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்னனர். இந்நிலையில் குழந்தை காணாமல் போனதை அடுத்து பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்னனர்.

இதனை அடுத்து நடந்த விசாரணையில் குழந்தை வனத்துறை அதிகாரிகளிடம் இருப்பது தெரியவந்தது. தாயின் கவனக்குறைவால் ஒன்றரை வயது குழந்தை நடு காட்டில், இரவு நேரத்தில் கீழே விழுந்த இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி பார்ப்போரை பதறவைக்கின்றது. 


Advertisement