தமிழகம்

1 முதல் 9ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி! தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு

Summary:

1 to 9 standard all students pass tamilnadu govt announcement

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ்  தற்போது உலகெங்கும் 180 நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் இந்தியாவில் பரவிய இந்த கொடிய வைரஸால்  இதுவரை 172 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் தமிழகத்திலும் இதுவரை 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மின்னல் வேகத்தில் பரவிவரும் கொரோனோவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவும்  பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் யாரும் வெளியே செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்


Advertisement