#Breaking: +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. சூடுபிடிக்கும் இணையதளம்..! மீண்டும் மாணவியர்கள் முதலிடம்..! 



+1 result announced

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்த்து மார்ச் மாதம் 14-ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வு ஏப்ரல் மாதம் 5-ஆம் தேதி நிறைவு பெற்றது. இந்த தேர்வு முடிவுகள் மே 19-ஆம் தேதி மதியம் 2 மணியளவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

அதன்படி பதினோராம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை 7,76,844 மாணவர்கள் எழுதிய நிலையில், தேர்வு முடிவுகள் படி 7,06,413 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவியர் 94.36% தேர்ச்சி அடைந்துள்ள நிலையில், மாணவர்கள் 86.99%தேர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

+1 result

மாணவியர்கள் மாணவர்களை விட 7.37 விழுக்காடு கூடுதலாக தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளனர். சற்று முன் வெளியாகிய தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.