இந்த வார நாட்களுக்கான தினப்பலன்கள்; எந்த தேதியில் என்ன வேலை செய்யலாம்?.. விபரம் இதோ.!
திங்கட்கிழமை (10 ஜூலை 2023):
திங்கட்கிழமையான இன்று களை செடிகளை அகற்ற ஏற்ற நாள். திருஷ்டி கழிக்க, அபிஷேகம் செய்ய, விதை சார்ந்த ஆலோசனை பெறுவதற்கும் சிறந்த நாள். இன்றைய நாளில் பைரவரை வழிபட்டால் கர்ம வினைகள் நீங்கும்.
செவ்வாய்க்கிழமை (11 ஜூலை 2023 - தேய்பிறை அஷ்டமி):
செவ்வாய்க்கிழமை அக்னி சம்பந்தமான பணிகளை மேற்கொள்ளவும், கால்நடைகளை வாங்கவும், கடனை அடைக்கவும், வாகனம் வாங்கவும் சிறந்த நாள். இன்று முருகரை வழிபட்டால் இழுபறிகள் நீங்கும்.
புதன்கிழமை (12 ஜூலை 2023):
புதன்கிழமை கலை சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்கும், ஏரி வெட்டுவதற்கும், தானியம் சேமிப்பதற்கும், புதிய அடுப்பு அமைக்கவும் சிறந்த நாளாகும். இன்று நவகிரக புதனை வழிபட்டால் புத்தி கூர்மை ஏற்படும்.
வியாழக்கிழமை (13 ஜூலை 2023):
வியாழக்கிழமை வங்கிப் பணிகளை கவனிப்பதற்கும், பயனற்ற மரங்களை வெட்டுவதற்கும், ஓமம் சார்ந்த செயல்களை செய்வதற்கும், விவசாய பணிகளை மேற்கொள்வதற்கும் நல்ல நாள். இன்று முருகரை வழிபட்டால் தடைகள் நீங்கி வெற்றிகள் கிடைக்கும்.
வெள்ளிக்கிழமை (14 ஜூலை 2023):
வெள்ளிக்கிழமை வாகன பழுதுகளை சரி செய்யவும், கண்கள் சார்ந்த சிகிச்சை மேற்கொள்ளவும், மனை சார்ந்த பணிகளை செய்வதற்கும், சாந்தி பரிகாரம் செய்வதற்கும் நல்ல நாளாகும். அம்பிகையை வழிபட்டால் நன்மை கிடைக்கும்.
சனிக்கிழமை (15 ஜூலை 2023):
சனிக்கிழமை புதிய நிலம் வாங்க உகந்த நாள், பசுமாடுகளை வாங்கவும், சாலை அமைப்பதற்கும், ஆபரணம் வாங்குவதற்கும் ஏற்ற நாள். சிவபெருமான வழிபட்டால் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும்.
ஞாயிற்றுக்கிழமை (16 ஜூலை 2023):
ஞாயிற்றுக்கிழமை உயர் பொறுப்பில் இருப்பவர்களை சந்திக்க உகந்த நாள், கட்டிடம் கட்டுவதற்கும், உழவமாடு பாராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கும், செடி கொடி மரம் நடுவதற்கும் ஏற்ற நாளாகும். அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டால் தம்பதிகளுக்கு இடையே புரிதல் ஏற்படும்.