இந்தியா விளையாட்டு

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கே சவால்விட்ட யுவராஜ்சிங்! வைரல் வீடியோ!

Summary:

Yuvaraj shared video

பல நாடுகளுக்குச் சென்று விளையாடி வந்த கிரிக்கெட் வீரர்கள் கொரோனா காரணமாக வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். இந்த நிலையில் விளையாட்டு வீரர்கள் சமூக வலைத்தளங்களில் உரையாடி வருவதும், அவர்கள் வீடியோக்களை பகிர்ந்து வருவதும் ரசிகர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. 


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ்சிங் ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே பொழுதை போக்குகிறார். அவ்வப்போது சக வீரர்களுடன் சமூக வலைத்தளம் மூலம் கலந்துரையாடுகிறார். இந்த நிலையில் தற்போது யுவராஜ் சிங், “keep it up” சேலஞ்ச் செய்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த சேலஞ்ச் செய்ய சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன் சிங் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரையும் இதில் பங்கேற்குமாறு பரிந்துரைத்துள்ளார்.

அதில் கிரிக்கெட் மட்டையின் விளிம்பின் மூலம் பந்தை இடைவிடாமல் மேல்வாக்கில் தட்டிவிட்டு விளையாடுகிறார். பேட்ஸ்மேன்களான தெண்டுல்கர், ரோகித்துக்கு இவ்வாறு பந்தை அடிப்பது எளிதாக இருக்கலாம். ஆனால் பந்து வீச்சாளரான ஹர்பஜன்சிங்குக்கு சுலபமாக இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement