யாருகிட்ட ஸ்பார்க் இல்லனு சொன்னிங்க தோனி அண்ணா.! இது ஸ்பார்க்குக்கும் மேல பயர் என நிரூபித்த இளம் வீரர்.!

யாருகிட்ட ஸ்பார்க் இல்லனு சொன்னிங்க தோனி அண்ணா.! இது ஸ்பார்க்குக்கும் மேல பயர் என நிரூபித்த இளம் வீரர்.!


young-player-today-palyed-very-well

ஐபிஎல் 13 வது சீசன் T20 போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று நடக்கும் 44வது லீக் ஆட்டத்தில் தோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.

இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற   ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.பெங்களூரு அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய படிக்கல் மற்றும் பின்ச் ஆரம்பத்தில் நிதானமாக ஆடினர். பின்னர் களமிறங்கிய விராட் மற்றும் ஏபிடி அருமையான ஜோடி சேர்ந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.

Msd

20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தனர். இதனையடுத்து 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் துவக்க வீரர்களான கெய்க்வாட் மற்றும் டுபிளசிஸ் ஆரம்பத்திலேயே அதிரடியாக ஆடினர். டுபிளசிஸ் 13 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தநிலையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சிறப்பாக ஆடிய துவக்க வீரர் கெய்க்வாட் 42 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து இந்த ஐபிஎல் சீஸனின் அவரது முதல் பிப்டியை பதிவு செய்தார்.

T20 போட்டியின் 37 வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதியபோது சென்னை அணி தோல்வியடைந்தது. அந்த ஆட்டம் முடிந்தவுடன் தோனி பேசுகையில், இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என கூறினார். அவர் கூறிய கருத்து அப்போது கடும் விமர்சனத்துக்குள்ளானது. கடந்த ஆட்டத்தின்போது இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என்று தோனி குறிப்பிட்டிருந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் இளம் துவக்கம் வீரரான கெய்க்வாட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்பார்க் இருக்கு என்பதை உறுதிப்படுத்தினார்.