பயிற்சி நேரங்களில் சாப்பிட காசில்லாமல், பானி பூரி விற்ற இரட்டை சதம் அடித்த இளம் சாதனையாளர்!young player record

இந்தியாவின் உள்ளூர் அணிகள் பங்கேற்கும் விஜய் ஹசாரே ஒருநாள் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை-ஜார்கண்ட் அணிகள் மோதியது. நேற்றய போட்டியின் துவக்க வீரராக களமிறங்கிய யாஷஸ்வி ஜெயஷ்வால் என்ற 17 வயது இளம் வீரர் சிறப்பாக ஆடினார்.

நேற்றைய போட்டியில் அதிரடியாக ஆடிய யாஷஸ்வி 17 பவுண்டரிகள், 12 சிக்சர்களுடன் 154 பந்துகளில் 203 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். இதன்மூலம் மிகவும் குறைந்த வயதில், 50 ஓவர் போட்டிகளில் குறைந்த வயதில் இரட்டை சதம் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை நேற்று நிகழ்த்தியுள்ளார் யாஷஸ்வி ஜெய்ஸ்வால். இவரது தந்தை உத்தரப்பிரதேச மாநிலத்தின் பஹோதி பகுதியில் ஒரு சிறிய கடை ஒன்றை நடத்திவருகிறார்.

young player

யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு சிறு வயது முதலே கிரிக்கெட் மீது அதிகம் ஆர்வம் கொண்டவராம். சிறுவனினி அசத்தலான ஆட்டத்தை பார்த்த சில சீனியர்கள், `நீ இங்கு இருந்தால் கிரிக்கெட்டில் பெரிய ஆளாக வரமுடியாது, அப்படி வர வேண்டும் என்றால் நீ மும்பை செல்ல வேண்டும் என கூறியுள்ளனர். இதனையடுத்து அங்கு அவரின் உறவினர் வீட்டில்  தங்கினார் ஜெய்ஸ்வால். 

அங்கு அவனது உறவுணரின் வீடு மிகச் சிறிய வீடு என்பதால், அங்கு ஒரு மாதம் மட்டுமே தங்க முடிந்தது. இதனையடுத்து  பால் பொருள்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் 12 வயதில் பணிக்குச் சேர்ந்தார். ஆனால், கடையில் பணிச்சுமை அதிகம் என்பதால் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த முடியவில்லை. இதனையடுத்து பயிற்சி முடிந்து சில நாள்கள் ஜெய்ஸ்வால் தாமதமாக வருவதாக குற்றம்சாட்டிய கடையின் உரிமையாளர் அவரை வேலையிலிருந்து நீக்கியுள்ளார்.

young player
இதனையடுத்து மும்பையில் புகழ்பெற்ற குழந்தைகள் கிரிக்கெட் பயிற்சி பெறும் ஆசாத் மைதானம் வந்து சேர்ந்தார். சிறுவனின் ஆட்டத்தை பார்த்து மைதானத்தில் இருக்கும் டென்ட்டில் 3 வருடங்கள் அங்கே தங்கவைத்துள்ளனர்.

அவருக்கு காசு பிரச்னை இருந்ததால் அசாத் மைதானத்தில் இரவு நேரங்களில் பானி பூரி விற்கும் பணி செய்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் பல நாள்கள் பானிபூரி விற்றும் வெறும் வயிற்றில் பசியோடுதான் படுத்தேன் என கூறியுள்ளார். ஆனால், எந்த நிலையிலும் மும்பையில் அவர் படும் கஷ்டங்களை தன் பெற்றோருக்குத் தெரியாமல் பார்த்துக்கொண்டதாக கூறியுள்ளார்.