பாகிஸ்தான் அணி கேப்டனுக்கு 8 வயது சிறுவன் அனுப்பிய கடிதம்.! பதில் அனுப்பிய பாபர் அசாம்.! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களாyoung boy wrote letter to pakisthan captain

7 வது T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியும், ஆஸ்திரேலியா அணியும் மோதியது. இறுதியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று T20 உலக கோப்பையை கைப்பற்றியது. ஆஸ்திரேலிய அணி முதன் முறையாக  T20 உலக கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

T20  உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரையிறுதியில் பாகிஸ்தான் அணியும் ஆஸ்திரேலிய அணியும் பங்கேற்ற போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி தற்போது  T20 உலக கோப்பையையும் வென்றுள்ளது.

இந்நிலையில், பாபர் அசாமிற்கு 8 வயது சிறுவன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளான். நான் உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். நான் உங்களை நேசிக்கிறேன். அனைவரும் நன்றாக விளையாடினர். அரையிறுதியில் வெற்றி பெற்றுவிடுவோம் என்று உணர்ந்தேன் என்று குறிப்பிட்டு, உங்கள் அனைவரின் ஆட்டோகிராப் போட்ட பேப்பர் எனக்கு அனுப்பி வைக்க முடியுமா என்று குறிப்பிட்டிருந்தார்.

இதைக் கண்ட பாபர் அசாம், உங்கள் அன்பான கடிதத்திற்கு நன்றி. உங்களால் எதையும் சாதிக்க முடியும் என்று நான் நம்புகிறேன். நீங்கள் எங்களின் ஆட்டோகிராப்பை பெறுவீர்கள். ஆனால் வருங்கால கேப்டன் உங்களது ஆட்டோகிராப் பெற நான் காத்திருக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.