விளையாட்டு

வெ.இண்டீஸை துவம்சம் செய்த வங்கதேசம் வரலாற்று வெற்றி; ஷகிப் அல் ஹசன் அசத்தல் சதம்.!

Summary:

world cup 2019 - west indies vs bangladesh - won bangla

 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் தற்சமயம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த வெஸ்ட் இண்டீஸ் வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் ‘பேட்டிங்’ செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எவின் லீவிஸ் (70), ஹோப் (96), ஹேட்மேயர் (50) ஆகியோர் அரைசதம் அடித்து கைகொடுக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 321 ரன்கள் எடுத்தது. 

அதன் பிறகு களமிறங்கிய வங்கதேச அணிக்கு துவக்க வீரர்களாக சௌம்யா சர்க்கார் - தமிம் இக்பால் 52 ரன்கள் சேர்த்தனர். சௌம்யா சர்க்கார் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் தமிம் 48 ரன்கள் சேர்த்து ரன் அவுட் ஆனார்.

ஷகிப்அல் ஹசன் இங்கிலாந்து போட்டியை தொடர்ந்து, இந்தப் போட்டியிலும் சதம் அடித்து அசத்தினார். 99 பந்துகளில் 124 ரன்கள் சேர்த்தார் ஷகிப். ரஹீம் 1 ரன்னில் ஆட்டமிழந்தாலும், அடுத்து வந்த லிட்டன் தாஸ் ஷகிப்புடன் பலமான கூட்டணி அமைத்தார்.

பின் ஷாகிப் உடன் இணைந்த லிடன் தாஸ் விண்டீஸ் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். சீரான இடைவேளையில் பவுண்டரிகள் இந்த பவுண்டரிகள் விளாச, வங்கதேச அணி வேகமாக வெற்றியை நோக்கி முன்னேறியது. இதையடுத்து வங்கதேச அணி 41.3 ஓவரி ல் 3 விக்கெட்டுக்கு 322 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வி த்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்தாண்டு உலகக்கோப்பை தொடரில் 250 ரன்களுக்கு மேல் உள்ள ரன்களை வெற்றிகரமாக எட்டிய முதல் அணி என்ற பெருமை பெற்றது வங்கதேச அணி. தவிர, உலகக்கோப்பை அரங்கில் அதிக ரன்களை வெற்றிகரமாக துரத்திய அணிகள் பட்டியலில் வங்கதேச அணி இரண்டாவது இடம் பிடித்தது.  

ஒருநாள் அரங்கில் வங்கதேச அணி எட்டிய அதிகபட்ச இலக்குகள் 
- 322/3 எதிர்- வெஸ்ட் இண்டீஸ் , 2019 
- 322/4 எதிர்- ஸ்காட்லாந்து, 2015  

இதன் மூலம் உலகக்கோப்பை அரங்கில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக துரத்திய ஆசிய அணி என்ற வரலாறு படைத்தது. அதே போல 300 ரன்களுக்கு மேலான இலக்கை 50 பந்துகளுக்கு மேல் மீதமிருந்த நிலையில் உலகக்கோப்பை அரங்கில் எட்டிய முதல் அணி என்ற வரலாறு படைத்தது வங்கதேச அணி.


Advertisement