விளையாட்டு

உலகக் கோப்பைக்காக மீண்டும் சச்சின், இம்முறை சற்று வித்தியாசம்; என்ன தெரியுமா?

Summary:

world cup 2019 - sachin tendulkar - commentyr 1st time

கிரிக்கெட் என்றால் சச்சின் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்திய அணிக்காக கால் நூற்றாண்டு காலம் பயணித்து பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக விளங்குபவர் தான் சச்சின் டெண்டுல்கர். அதேபோல் உலகக்கோப்பை போட்டித் தொடர் என்றால் அனல் பறக்கும் அவரது ஆட்டத்தை காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். இதுவரை 6 உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் பங்கேற்று விளையாடி உள்ளார்.

2003ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் 673 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருது வென்றார். மேலும் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். இதுவரை உலகக் கோப்பைப் போட்டித் தொடர்களில் 2,278 குவித்து தற்போதுவரை முதல் இடத்தில் உள்ளார்.

சர்வதேச போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெற்றாலும் இந்திய அணிக்காக அவ்வப்போது தனது ஆலோசனைகளை தெரிவித்து வருகிறார். மேலும், ஐபிஎல் போட்டி தொடரில் மும்பை அணியின் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். ஆனால் கிரிக்கெட் வர்ணனையாளராக அவரை இதுவரை யாரும் பார்த்ததில்லை. தற்போது அந்தக் குறையையும் ரசிகர்களுக்காக நிவர்த்தி செய்ய உள்ளார்.

இன்று தொடங்கும் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் முதல் முறையாக வர்ணனையாளராக அறிமுகமாக உள்ளார். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் அவர் வர்ணனையாளராகச் செயல்பட இருக்கிறார். இந்நிலையில், SachinOpensAgain என அவரது ரசிகர்கள் ட்விட்டரில் வாழ்த்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். மாஸ்டர் பிளாஸ்டரின் கிரிக்கெட் கண்ணோட்ட அறிவை காண ரசிகர்கள் இப்போதிலிருந்தே வெயிட்டிங்...!


Advertisement