டான் ரோஹித்தால் உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியா, நேற்று படைத்த சாதனை என்ன தெரியுமா?

டான் ரோஹித்தால் உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியா, நேற்று படைத்த சாதனை என்ன தெரியுமா?


world cup 2019 - rohit sharma - india new record

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலககோப்பை தொடரில் இந்திய அணி தன்னுடைய முதல் லீக் ஆட்டத்தில் இன்று, தென்ஆப்ரிக்க அணியை எதிர்த்து விளையாடி வருகிறது.  இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

தென்னாப்பிரிக்கா அணியின் டிகாக் மற்றும் ஆம்லா துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். தென் ஆப்பிரிக்க அணி ஆரம்பத்திலே விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாற்றத்துடன் விளையாடியது. இறுதியில் தென்னாப்பிரிக்க அணி அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்களை எடுத்தது. 

World cup 2019

இந்தநிலையில்  228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர் ஆரம்பத்திலே அதிர்ச்சியளித்தார். அவர் 12 பந்துகளில் 8 ரன்கள் எடுத்தநிலையில் ரபடா ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய விராட் கோலியும் 34 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து டீ காக்கிடம் கேட்ச் கொடுத்து ரசிகர்களை ஏமாற்றினார். 

பின் வந்த ராகுல் (26) சொதப்பலாக வெளியேறினர். தொடர்ந்து வந்த தோனி (34) நீண்ட நேரம் நிலைக்கவில்லை. துவக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக ஆடி தற்போது வரை ஆட்டமிழக்காமல் ஒருநாள் அரங்கில் தனது 23வது சதத்தை பூர்த்தி செய்தார். 

World cup 2019

தொடர்ந்து வந்த ஹர்திக் பாண்டியா அதிரடி காட்ட, இந்திய அணி 47.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 230 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா (122), ஹர்திக் பாண்டியா (15) அவுட்டாகாமல் இருந்தனர். 

இப்போட்டியில் சதம் அடித்த ரோகித் சர்மாவால், உலகக்கோப்பை அரங்கில் இந்திய சார்பில் அடிக்கப்பட்ட 26வது சதமாக அமைந்தது. இதன் மூலம் உலகக்கோப்பை அரங்கில் அதிக தனிநபர் சதம் அடித்த ஆஸ்திரேலிய அணியின் (26 சதம்) உலக சாதனையை ரோகித் சர்மா சமன் செய்தார். 



 

சர்வதேச ஒருநாள் அரங்கில் ரோகித் சர்மா அடித்த 23வது சதமாக இது அமைந்தது. இதன் மூலம் ஒருநாள் அதிக சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் முன்னாள் கேப்டன் கங்குலி (22 சதம்) சாதனையை ரோகித் சர்மா உடைத்தார். 

இதெ போல சேஷிங்கில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா 4வது இடம் பிடித்தார். 
ரன் சேஷில் அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியல்: 
விராட் கோலி (இந்தியா) -25 சதம் 
சச்சின் (இந்தியா)- 17 சதம் 
கெயில் (விண்டீஸ்) - 12 சதம் 
தில்ஷன் (இலங்கை)/ ரோகித் (இந்தியா) -11 சதம்