தல தோனியை அவமானப்படுத்துகிறதா ஐசிசி; கொந்தளிக்கும் ரசிகர்கள் வைரல் வீடியோ.!

தல தோனியை அவமானப்படுத்துகிறதா ஐசிசி; கொந்தளிக்கும் ரசிகர்கள் வைரல் வீடியோ.!


world-cup-2019---msdhoni---run-out---vairal-video

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக்கோப்பை முதல் அரையிறுதி போட்டி கடந்த 9 ஆம் தேதி தொடங்கியது. நியூசிலாந்து பேட்டிங் செய்தபோது மழையின் காரணமாக போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் மீதமுள்ள ஆட்டங்கள் நேற்று முன்தினம்  நடைபெற்ற நிலையில் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. 

எளிமையான இலக்கை வென்றுவிடலாம் என்ற கனவோடு பேட்டிங்கை துவங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி கொடுத்தது நியூசிலாந்து அணி. மேலும் அடுத்தடுத்ததாக முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்த நிலையில் இந்திய ரசிகர்கள்  நம்பிக்கையை இழந்து மிகுந்த வருத்ததில் இருந்தனர்.

World cup 2019

இந்த நிலையில் அவர்களை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் தோனியும், ஜடேஜாவும் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி மீண்டும் நம்பிக்கையை கொடுத்தனர்.ஆனால் அவர்களும் விக்கெட்டை இழந்து வெளியேறியதை தொடர்ந்து  இந்தியா 18  ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான தோனி, கடைசி வரை களத்தில் நின்று நியூசிலாந்து அணிக்கு பயத்தை ஏற்படுத்தினார். மேலும் இந்திய அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றார். சிறப்பாக ஆடிக் கொண்டிருக்கும் போது, ஆட்டத்தின் 48.2-வது பந்தை தோனி அடித்து ஆட முற்பட்டார். அப்போது இரண்டு ஓட்டங்கள் எடுக்க முயன்றார். ஆனால் கப்திலின் அற்புதமான துரோவால் தோனி ரன் அவுட் ஆனார். 

இந்நிலையில் இந்த வீடியோவை எடிட் செய்து தற்போது ஐசிசி கிண்டல் செய்துள்ளது. நியூசிலாந்து வீரர்கள் சூப்பர் பவருடன் களமிறங்கி பைனலுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக திறமையுடன் செயல்பட்டது போல ஐசிசி அந்த வீடியோவை உருவாக்கி உள்ளது.

ஐசிசிக்கு தோனி அவுட்டானதில் அப்படி ஒரு சந்தோசம் போல அதிலும் இந்தியா செமி பைனலை விட்டு வெளியேறியதில் அளவு கடந்த மகிழ்ச்சியோ என்று கேள்வி எழுப்ப தோன்றுகிறது. ஏன் ஐசிசி நடுநிலையாக இல்லாமல் இப்படி காழ்ப்புணர்ச்சியுடன் இருக்கிறது. இப்படி ஒரு மூத்த வீரரை ஐசிசி அவமானப்படுத்தலாமா என்று ரசிகர்கள் கேட்டு சமூகவலைதளங்களில் கொந்தளித்து வருகிறார்கள்.