உலகக்கோப்பை: இந்திய அணி தேர்வில் அந்த ஒரு விஷயம்தா இடிக்குது; கவாஸ்கரின் அதிரடி காரணங்கள்.!

உலகக்கோப்பை: இந்திய அணி தேர்வில் அந்த ஒரு விஷயம்தா இடிக்குது; கவாஸ்கரின் அதிரடி காரணங்கள்.!


world cup 2019 - indian team - bcci - kavasker

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்நிலையில் அடுத்த மாதம் 30 ஆம் தேதி முதல் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது. போட்டியில் பங்கேற்கும் அணைத்து அணிகளும் உலகக்கோப்பையில் விளையாட உள்ள அணியினை அறிவித்துவருகின்றனர். இந்நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணியை அறிவித்தது இந்திய கிரிக்கெட் வாரியம்.

அணியில் பெரிதாக மாற்றம் ஏதும் இல்லாவிட்டாலும் ஒருசில வீரர்கள் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர்தான் தினேஷ் கார்த்திக். தோனிக்கு பதிலாக மாற்று விக்கெட் கீப்பரை தேர்வு செய்யும் முடிவில் முதலில் ரிஷப் பண்ட் தான் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் ஒருநாள் அணியில் தினேஷ் கார்த்திக்கைவிட ரிஷப் பண்ட்டுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

World cup 2019

ஆனால் பண்ட் விக்கெட் கீப்பிங்கில் சொதப்பியதால் தற்போது இந்த வாய்ப்பு தினேஷ் கார்த்திக்குக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்வுக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். தோனி ஆடாதபட்சத்தில் தான் மாற்று விக்கெட் கீப்பர் களமிறக்கப்படுவார். அப்படியிருக்கையில், முக்கியமான தொடரில் விக்கெட் கீப்பிங் சிறப்பாக செய்வது அவசியம். அந்த காரணத்திற்காகத்தான் தினேஷ் கார்த்திக்கை எடுத்தோம் என்று எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்தார்.

World cup 2019

இந்நிலையில், ரிஷப் பண்ட்டை அணியில் எடுக்காதது வியப்பை ஏற்படுத்தியதாக முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள கவாஸ்கர், ரிஷப் பண்ட் நல்ல ஃபார்மில் இருக்கும் நிலையில், அவரை உலக கோப்பை அணியில் எடுக்காதது ஆச்சரியமாக உள்ளது. ஐபிஎல்லில் மட்டுமல்லாமல் அதற்கு முன்னதாகவும் நன்றாகவே ஆடினார். விக்கெட் கீப்பிங்கிலும் நிறைய மேம்பட்டிருக்கிறார். அப்படியிருக்கையில் அவரை எடுக்காதது வியப்பானதுதான்.

World cup 2019

முதல் 6 பேட்ஸ்மேன்களில் தவான் மட்டுமே இடது கை பேட்ஸ்மேன். மிடில் ஆர்டரில் ஒரு பேட்ஸ்மேன் கூட இடது கை பேட்ஸ்மேன் கிடையாது. இடது - வலது பேட்டிங் இணை பேட்டிங் ஆடும்போது எதிரணி பவுலருக்கும் சிரமம். ஃபீல்டிங் செட் செய்வதில் எதிரணி கேப்டனுக்கும் அதிக பளு இருக்கும். அதனடிப்படையில், இடது கை பேட்ஸ்மேன் ஒருவர் மிடில் ஆர்டரில் இருப்பது அவசியம். ஆனால் ரிஷப் பண்ட் எடுக்கப்படாதது ஆச்சரியம்தான் என்று கவாஸ்கர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.