உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு; ரிஷப்பன்டை முந்தினார் தினேஷ் கார்த்திக்.!world cup 2019 - indian cricket team selected - bcci

2019 உலககோப்பை கிரிக்கெட் தொடர் நெருங்கி கொண்டிருக்கும் வேளையில் இந்திய அணி தனது வீரர்களை தேர்வு செய்வதில் பல்வேறு வகையான யோசனைகள் பலதரப்பில் இருந்து வந்த வண்ணம் இருந்தன. 

குறிப்பாக 4,5,6 ஆம் இடங்களில் இறங்கும் பேட்ஸ்மேன்களை தேர்வு செய்வதில் இந்திய அணிக்கு பெரும் நெருக்கடி உருவானது. அந்த இடங்களுக்கு தோனி, ரஹானே, ராயுடு, கேதர் ஜாதவ், விஜய் சங்கர், கே.எல்.ராகுல் என ஒரு நீண்ட பட்டியலே இருந்தது. 

விக்கெட் கீப்பிங்கை பொறுத்த வரையில் தோனிக்கு அடுத்து இரண்டாம் கட்ட வீரராக யாரை தேர்வு செய்வார்கள் என்பது தொடர்பான குழப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரிஷப்பன்டை முந்தி தினேஷ் கார்த்திக் இடம் பிடித்துள்ளார். 

இந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்தது போலவே இங்கிலாந்தில் நடக்கும் 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.