இன்றும் சென்னை அணி வெற்றிபெறவே அதிக வாய்ப்பு! ஏன் தெரியுமா?

இன்றும் சென்னை அணி வெற்றிபெறவே அதிக வாய்ப்பு! ஏன் தெரியுமா?


Winning prediction SRH vs CSK match 32

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. 32 போட்டிகள் முடிவு பெற்றுள்ள நிலையில் நடப்பு சாம்பியனான சென்னை அணி 8 போட்டிகளில் மொத்தம் 7 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. டெல்லி, மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் புள்ளி பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.

இந்நிலையில் புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் கைதராபாத் அணியுடன் சென்னை அணி கைதராபாத்தின் சொந்த மண்ணில் இன்று விளையாட உள்ளது. இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் இரு அணிகளும் மோதுகின்றது. ஏறக்குறைய அடுத்த சுற்றுக்கு சென்னை அணி தகுதிபெற்றுவிட்ட நிலையில் கைதராபாத் அணிக்கு இன்றைய ஆட்டம் மிகவும் முக்கியமான ஓன்று.

IPL 2019

இதுவரை சென்னை, கைதராபாத் அணிகளின் போட்டி நிலவரங்களை பார்த்தால் இன்றும் சென்னை அணி வெற்றிபெறவே அதிக வாய்ப்புள்ளது. காரணம், இதுவரை சென்னை, கைதராபாத் அணிகள் இடையே நடந்துள்ள 10 ஐபில் போட்டிகள் சென்னை அணி 8 போட்டிகளிலும், கைதராபாத் அணி இரண்டு போட்டிகளிலும் வேற்றுப்பெற்றுள்ளது.

அதேபோல கைதராபாத்தின் சொந்த மைதானத்தில் நடந்துள்ள மூன்று போட்டிகளில் சென்னை அணி 2 போட்டிகளிலும், கைதராபாத் அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. எப்படி பார்த்தாலும் சென்னை அணியின் வெற்றி விகிதம் பலமடங்கு அதிகமாகவே உள்ளது.

IPL 2019

மேலும் , சென்னை அணி சிறப்பான ஆட்டத்தை இந்த சீசனில் வெளிப்படுத்திவருவதால் இன்றைய ஆட்டத்திலும் சென்னை அணி வெற்றிபெறவே அதிக வாய்ப்புள்ளது.