இந்திய கிரிக்கெட் அணிக்கு இரண்டு கேப்டன்களா! அடுத்து நடக்க போவது என்ன?

இந்திய கிரிக்கெட் அணிக்கு இரண்டு கேப்டன்களா! அடுத்து நடக்க போவது என்ன?



Will split captaincy for team india

உலக்கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் தவறான முடிவுகளே காரணம் என்று ரசிகர்களால் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதனால் விராட் கோலியின் தலைமையில் சற்று அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸில் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி அடுத்த மாதம் விளையாட உள்ளது. இதற்கான இந்திய வீரர்கள் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்த தேர்வின் போது டெஸ்ட் அணிக்கு ஒரு கேப்டனும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு ஒரு கேப்டனும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அறிவிக்கும்பட்சத்தில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக கேப்டன் பொறுப்பை ஏற்று நடத்திய ரோகித் சர்மா ஒருநாள், டி20 தொடருக்கும் விராட் கோலி டெஸ்ட் தொடருக்கும் தலைமை வகிக்க வாய்ப்பு உள்ளது.

Team India

ஆனால் இந்திய அணியின் வரலாற்றை புரட்டி பார்க்கும் போது இத்தகைய முடிவினை தேர்வு குழுவினர் துணிச்சலுடன் எடுப்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காரணம் 2007 - 2008ல் கும்ப்ளே டெஸ்ட் கேப்டனாகவும், தோனி ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாகவும் செயல்பட்டனர். இதேபோல் 2016ல் தோனி மற்றும் கோலிக்கு பதவிகள் பிரித்து கொடுக்கப்பட்டன. 

ஆனால் இந்த இரண்டு கேப்டன்கள் முறை இந்திய அணிக்கு பெரிய அளவில் வெற்றியை தேடித் தரவில்லை. எனவே இந்த முறை நிச்சயம் தேர்வு குழுவினர் இத்தகைய முடிவினை எடுக்க மாட்டார்கள் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர். எது எப்படியோ வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைத்துவிடும். காத்திருப்போம்!