விளையாட்டு

வா தல போகலாம்... துணைக்கு வெஸ்ட் இண்டீஸ் அணியை அழைத்துச்சென்ற இலங்கை அணி.!

Summary:

வா தல போகலாம்... துணைக்கு வெஸ்ட் இண்டீஸ் அணியை அழைத்துச்சென்ற இலங்கை அணி.!

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ்  அணிக்கு எதிரான ஆட்டத்தில் 20 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை  தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 189 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

இந்தத் தோல்வியுடன் பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி உலக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. நடப்பு சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி இதுவரை ஆடிய 4 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டும் பதிவு செய்த நிலையில் இந்த அணி அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது. இலங்கை அணி நேற்றய போட்டியில் வெற்றிபெற்றாலும் அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது.


Advertisement