தைரியமான போலீசை பாராட்டித்தள்ளிய பிரபல கிரிக்கெட் வீரர்! வைரல் வீடியோ!! - TamilSpark
TamilSpark Logo
இந்தியா விளையாட்டு

தைரியமான போலீசை பாராட்டித்தள்ளிய பிரபல கிரிக்கெட் வீரர்! வைரல் வீடியோ!!

தற்போது தென் மேற்குப் பருவமழை இந்தியாவின் மேற்குப் பகுதி மாநிலங்களை மிரளவைத்துவருகிறது. மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, கேரளா, தமிழகத்தில் கனமழை கொட்டித்தீர்த்து வருவதால், பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

தற்போது குஜராத் மாநிலத்தில் பெய்துவரும் தீவிர மழையால், மோர்பி மாவட்டத்தில்  சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அப்பகுதியில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்வதற்கு மீட்புப்பணிகள் நடந்துவருகிறது.

இந்தநிலையில் மோர்பியில் வெள்ளத்தில் சிக்கிய இரண்டு சிறுமிகளை, போலீசார் ஒருவர் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம், தோளில் சுமந்து காப்பாற்றியுள்ளார். அவர் சிறுமிகளை தோளில் சுமந்தபடி , வெள்ளத்தை கடந்து காப்பாற்றியதால் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

அந்த காவலரின் செயலை குஜராத் முதலவர் விஜய் ருபானி பாராட்டி டுவீட் செய்துள்ளார். அதேபோல் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ். லக்ஷ்மண், வெள்ளத்தில் சிக்கிய இரண்டு குழந்தைகளைக் காவலர் ப்ரித்வி ராஜ்சிங் ஜடேஜா தோளில் சுமந்து சென்றுது எவ்வளவு நெகிழ்ச்சியான வீடியோ. அவரது அர்ப்பணிப்புக்கு தலைவணங்குகிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.
 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo