
VVS lakshmanan talks bout virakholi batting style
ஐபில் போட்டியின் 12 வது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதுவரை 16 போட்டிகள் முடிவு பெற்றுள்ள நிலையில் சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், டெல்லி அணிகள் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தில் உள்ளது. இந்த சீசனிலாவது கோப்பையை வெல்லுமா என எதிர்பார்க்கப்பட்ட பெங்களூர் அணி இந்த முறையும் பயங்கரமான சொதப்பி வருகிறது.
விராட்கோலியின் தலைமையிலான பெங்களூர் அணி இதுவரை நடந்த அனைத்து போட்டிகளிலும் தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. பெங்களூர் அணியில் விராட் கோலி, டீவிலியர்ஸ் போன்ற சிறப்பான வீரர்கள் இருந்தும் ஒரு போட்டியில் வெற்றிபெறுவதற்கு கூட பெங்களூர் அணி தடுமாறிவருகிறது.
பெங்களூர் அணியின் சொதப்பலான பந்து வீச்சு மற்றும் பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டம்தான் அந்த அணியின் தோல்விக்கு காரணம். குறிப்பாக கேப்டன் விராட்கோலி இதுவரை ஒரு ஆட்டத்தில்கூட ஜொலிக்க வில்லை. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சன்ரைசர்ஸ் அணியின் ஆலோசகர் விவிஎஸ் லட்சுமணன், விராட் கோலி ரிஸ்ட் ஸ்பின்னர்களிடம் ஆட்டமிழக்கிறார்.
குறிப்பாக கூக்ளி பந்தில் விழுந்துவிடுகிறார். கடந்த சீசனில் கூட முஜீபுர் ரஹ்மான், ஆடம் ஸாம்பா, மார்கண்டே ஆகியோரிடம் விக்கெட்டை இழந்தார். ஏற்கனவே அவரை வீழ்த்தியுள்ள ஷ்ரேயாஸ் கோபால் இந்த சீசனிலும் கோலியை வீழ்த்தினார். எனவே ரிஸ்ட் ஸ்பின்னில் திணறும் கோலி, ரிஸ்ட் ஸ்பின்னை சிறப்பாக எதிர்கொள்ள கூடுதல் பயிற்சி எடுத்து அதையும் சிறப்பாக ஆட முனைய வேண்டும் என லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement