"மற்றவர்களைப் போல கூட்டத்திற்காக ஆடுபவனல்ல நான்" விராட் கோலி ஆவேசம்!

"மற்றவர்களைப் போல கூட்டத்திற்காக ஆடுபவனல்ல நான்" விராட் கோலி ஆவேசம்!


Vurat kohli about t20 format

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விராட் கோலி அதிகபட்சமாக 94 ரன்கள் விளாசினார். 

முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 207 ரன்கள் குவித்தது. இமாலய இலக்கை விரட்டி களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ஆரம்பத்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தார். 

பின்னர் களமிறங்கிய விராட் கோலி 11 ஓவர்கள் வரை மிகவும் பொருமையாகவே ஆடினார். ஒரு பக்கம் கேஎல் ராகுல் அதிரடியாக ஆடியாதால் விராட் கோலியின் பேட்டிங் ரசிகர்களை ஏமாற்றும் விதமாக அமைந்தது. 

Virat Kohli

பின்னர் 12 ஆவது ஓவரில் இருந்து விராட் கோலி அதிரடியை காட்டத் துவங்கினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த கோலி 50 பந்துகளில் 94 ரன்கள் எடுத்தார். 6 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் அடங்கும். 

பின்னர் முடிந்த பிறகு பேசிய கோலி, "டி20 போட்டிகளில் மற்றவர்களைப் போல வந்தவுடன் பந்தை காற்றில் பறக்கவிட்டு கூட்டத்தினரை உற்சாகப்படுத்துபவன் இல்லை நான். என் வேலையில் தான் எப்போதும் என் கவனம் இருக்கும். 

நான் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளில் ஆடுபவன். அனைத்து வகைகளிலும் சிறப்பாக ஆட வேண்டும் என்பதே என் நோக்கம். ஒரு வகையான போட்டியில் மட்டும் சிறந்து விளங்க வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு தேவையில்லை" என கூறியுள்ளார்.