"கிரிக்கெட் மைதானத்திலேயே சாகவும் தயாராக இருந்தேன்" ஹெல்மெட் அணியாததற்கான காரணத்தை தெரிவித்த ரிச்சர்ட்ஸ்! - TamilSpark
TamilSpark Logo
விளையாட்டு

"கிரிக்கெட் மைதானத்திலேயே சாகவும் தயாராக இருந்தேன்" ஹெல்மெட் அணியாததற்கான காரணத்தை தெரிவித்த ரிச்சர்ட்ஸ்!

மேற்கு இந்திய தீவுகள் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் தான் ஹெல்மெட் அணியாமல் விளையாடியதற்கான காரணத்தை தற்போது பகிர்ந்துள்ளார்.

மேற்கு இந்திய தீவுகள் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் 121 டெஸ்ட் மற்றும் 187 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 24 சதங்களை விளாசியுள்ள ரிச்சர்ட்ஸ் விளையாடிய காலக்கட்டத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணி அசுர பலத்தில் இருந்தது.

அந்த காலக்கட்டத்திலும் ரிச்சர்ட்ஸ் ஹெல்மெட் அணியாமல் தான் விளையாடியுள்ளார். 150 kmph வேகத்தில் வந்த பந்துகளையும் ஹெல்மெட் இல்லாமல் எதிர்கொண்ட அவரது தைரியத்தை குறித்து வாட்சன் தற்போது அவரிடம் கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த அவர், "நான் பெரிதும் விரும்பும் விளையாட்டிற்காக என் உயிரையும் இழக்க தாயாராக இருந்தேன். எந்த ஒரு விளையாட்டிலும் ரிஸ்க் எடுக்க துணிந்தவர்கள் தான் பல சாதனைகளை படைத்துள்ளனர். என்னுடைய விளையாட்டிற்காக நான் இந்த ரிஸ்க் எடுத்தது பெரிதாக தெரியவில்லை" என கூறியுள்ளார்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo