இந்தியா விளையாட்டு

தரவரிசையில் தாறுமாறு காட்டும் விராட்கோலி.. அனைத்து வகை கிரிக்கெட்டிலும் டாப்.. புகழும் ரசிகர்கள்..

Summary:

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி நடந்து வருகிறது.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி நடந்து வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 2-வது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. நேற்று முன்தினம் நடந்த மூன்றாவது T20 போட்டியில், இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தநிலையில், இந்த தொடர் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது. இந்த தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் 73 ரன்களும், 3-வது ஆட்டத்தில் 77 ரன்களும் எடுத்திருந்தார் விராட் கோலி. இந்தநிலையில், டி-20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி 5-வது இடத்தில் உள்ளார் விராட் கோலி.

விராட் கோலி ஏற்கனவே ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடம், டெஸ்ட் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசையில் 5-வது இடம் பிடித்துள்ள விராட் கோலி, தற்போது டி-20 கிரிக்கெட்டிலும் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் டாப்-5 தரவரிசைக்குள் இடம்பிடித்திருக்கும் ஒரே வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். 


Advertisement