இந்தியா விளையாட்டு

கடந்த தொடரின் வெற்றி குறித்தும், தல தோனியின் எதிர்காலம் குறித்தும் விராட் கோலியின் அசத்தலான பதில்!

Summary:

virat talk about MS Dhoni


இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் கடந்த 19-ந்தேதி தொடங்கியது. இதில் மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் கடைசி மற்றும் மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றதால், 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா இரட்டை சதம், 2 சதம் உள்பட 529 ரன்கள் சேர்த்து தொடரில் முதலிடம் பிடித்தார். இதில் 19 சிக்சர்களும் அடங்கும். இதனையடுத்து ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதுகளை ரோஹித் சர்மா தட்டிச் சென்றார். இதனால் அவருக்குபாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்த தொடரின் வெற்றி குறித்து கோலி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், கடுமையான முயற்சிக்கு கிடைத்த வெற்றி, இதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார். செய்தியாளர்களின் சந்திப்பின் போது, விராட் கோலியிடம் தோனியின் எதிர்காலம் குறித்து கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்த விராட் கோலி, தோனி இங்கு தான் அறையில் இருக்கிறார், வாங்க, ஒரு ஹலோ சொல்லுங்கள் என்று கூறினார், அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement