நேற்றய தோல்விக்கு என்ன காரணம்.? ஓப்பனாக பேசிய விராட் கோலி.!

நேற்றய தோல்விக்கு என்ன காரணம்.? ஓப்பனாக பேசிய விராட் கோலி.!


virat talk about last match

ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள், T20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் இன்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 374 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 375 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீர்களாக ஷிகர் தவான் மற்றும் மயங்க் அகர்வால் இருவரும் களமிறங்கினர். நேற்றையப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா 90 ரன்கள் குவித்தார்.

virat

இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் மட்டுமே எடுத்து. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. நேற்றய போட்டிக்கு பிறகு பேசிய விராட் கோலி, "பயிற்சிக்கு எங்களுக்குப் போதிய நேரம் கிடைத்தது. அதிகமாக டி20 விளையாடி வந்தோம். நீண்ட நாட்களுக்குப் பின் முழு ஒரு நாள் போட்டியில் ஆடியிருக்கிறோம். அப்படியிருந்தாலும் கூட நாங்கள் இதற்கு முன்னும் ஒரு நாள் போட்டிகளில் ஆடி அனுபவம் பெற்றவர்கள்தான். நேற்று ஒட்டுமொத்தமாக சரியாக விளையாடவில்லை என்றே கூறலாம். அதுவும் நேற்றைய தோல்விக்கு காரணம். ஒட்டுமொத்தமாக ஒரு அணியாக, சரியாக விளையாடாதபோது காரணங்கள் சொல்லக் கூடாது.

பேட்டிங்கில்  அனைவருமே தீவிரத்துடன் ஆடினோம். ஒருபோதும் எங்களால் இலக்கை எட்ட முடியாது என்று நினைக்கவே இல்லை. ஹர்திக் பாண்ட்யாவின் ஆட்டம் அந்தத் தீவிரத்துக்கு ஒரு உதாரணம். ஆனால் முதல் 3 பேட்ஸ்மேன்கள் 130-140 ரன்களைச் சேர்க்க வேண்டும். அது  நடக்கவில்லை என தெரிவித்தார்.