ஐபிஎல்-லில் ஒருபோதும் இந்த அணியை விட்டு வெளியேற மாட்டேன்! இந்திய அணியின் முக்கிய வீரர் ஓப்பன் டாக்!

ஐபிஎல்-லில் ஒருபோதும் இந்த அணியை விட்டு வெளியேற மாட்டேன்! இந்திய அணியின் முக்கிய வீரர் ஓப்பன் டாக்!


Virat talk about ipl match

ஐபிஎல்-லில் விளையாடும்வரை பெங்களூரு அணியை விட்டு விலகமாட்டேன் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கடந்த சில வருடங்களாக மோசமாக விளையாடி வருகிறது. ஐந்து முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றும் மூன்று முறை இறுதிச்சுற்றில் விளையாடியும் பிரபல வீரர்களைக் அணியில் வைத்திருந்தும், பெங்களூரு அணியால் இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லமுடியவில்லை. 

ipl

இந்த அணி சமீப காலமாக மோசமாக விளையாடி வருவதால், அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன், பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டார்கள். 

இந்நிலையில் இன்ஸ்டகிராமில் ஆர்சிபி வீரர்கள் விராட் கோலியும் டிவில்லியர்ஸும் உரையாடியபோது,
ஆர்சிபி அணியை விட்டு விலகுவது குறித்து என்னால் யோசிக்கக் கூட முடியாது என விராட் கூறியுள்ளார். மேலும், ஐபிஎல்-லில் விளையாடும்வரை இந்த அணியை விட்டு விலகமாட்டேன் எனவும், ஐபிஎல்லில் அணியை விட்டு வெளியேறும் எந்த சூழ்நிலையும் இதுவரை இல்லை என தெரிவித்துள்ளார்.