இந்தியா விளையாட்டு

கேக்கல.. இன்னும் சத்தமா.. மைதானத்தில் நின்று விராட்கோலி செய்த காரியம்.. வைரலாகும் வீடியோ..

Summary:

மைதானத்தில் இருந்து விசில் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்திய விராட்கோலியின் வீடியோ இணையத்

மைதானத்தில் இருந்து விசில் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்திய விராட்கோலியின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்துவருகிறது. முன்னதாக நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து, முதல் இன்னிங்சில் 329 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்து வீச்சால் கடுமையாக திணறியது. வெறும் 134 ரன்கள் மட்டுமே எடுத்தநிலையில் ஆல் அவுட்டானது. இந்திய அணி வீரர் அஸ்வின் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தற்போது இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஆடி வருகிறது.

இந்நிலையில் மைதானத்தில் இந்திய அணி பீல்டிங் செய்துகொண்டிருந்தபோது, மைதானத்தில் இருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி ரசிகர்களை பார்த்து விசில் அடித்து, கைதட்டி உற்சாகப்படுத்தினார். இதனை பார்த்த ரசிகர்களும் பதிலுக்கு விசில் அடிக்க, பிகில் பட காட்சி போல், சத்தமா.. சரியா கேட்கலா என்பதுபோல் விராட்கோலி சைகை காட்ட ரசிகர்கள் மேலும் சத்தம் போட்டு இந்திய அணியை உற்சாகப்படுத்தினர்.

இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்திய கிரிக்கெட் வாரியம், சென்னையில் இருக்கும் போது நீங்கள் #WhistlePodu!' என கூறியுள்ளது. கோலி, சென்னை அணியின் விசில் போடு என்பதைக் குறிப்பிட்டு அப்படி கூறியுள்ளதால், இது தொடர்பான வீடியோ தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.


Advertisement