நேற்றைய போட்டியில் சிறப்பாக ஆடி ரோஹித் சர்மாவை பின்னுக்கு தள்ளிவிட்டு, விராட் கோலி புதிய சாதனை!

நேற்றைய போட்டியில் சிறப்பாக ஆடி ரோஹித் சர்மாவை பின்னுக்கு தள்ளிவிட்டு, விராட் கோலி புதிய சாதனை!


virat kohli new record


தென் ஆப்பிரிக்கா அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த இரு அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி மழையால் ரத்தானதால், இரண்டாவது டி20 போட்டி மொஹாலியில் நேற்று நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்து.

Virat Kohli

இதனையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. இந்திய அணியின் துவக்க வீரர் ரோஹித் சர்மா 12 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், சிறப்பாக ஆடிய ஷிகர் தவான் 40 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

இதனையடுத்து களமிறங்கி அதிரடியாக ஆடிய விராட் கோலி 52 பந்துகளில் 72 ரன்கள் அடித்தார். இதில் 3 சிக்சரும் 4 பவுண்டரியும் அடங்கும். இந்திய அணி 19 ஓவர்கள் நிறைவு பெற்ற நிலையில் 3 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

நேற்று நடந்த இந்தப் போட்டியில் 72 ரன்களை அடித்த விராட் கோலி, ரோஹித் சர்மாவை முந்தி டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார்.