விளையாட்டு லைப் ஸ்டைல்

எப்படி இருந்த நான், இப்புடி ஆயிட்டேன்!!! வைரலாகும் விராட்கோலியின் பதிவு!!

Summary:

Virat Kohli end of decade photo goes viral

பல்வேறு சாதனைகளை தனக்கு சொந்தமாக்கி, உலகளவில் நம்பர் 1 கிரிக்கெட் வீரர் என்ற பெருமையுடன் உள்ளார் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி. இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் விராட்கோலி போட்டுள்ள பதிவு ஓன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

பிரபலங்கள் பலரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் 'Beginning of the decade' மற்றும் 'End of the decade' என்ற தலைப்பில் சில புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். அதாவது பத்து வருடத்திற்கு முன் எப்படி ஆரம்பித்து தற்போது எப்படி முடித்துள்ளோம் என்பதே இதன் அர்த்தமாகும்.

இந்த வாசகத்தை பயன்படுத்தி, 10 வருடத்திற்கு முன் தன் கையில் செருப்புடனும், தற்போது அவர் பயன்படுத்தும் உயர்தர ஷூ உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் விராட்கோலி.


Advertisement