போட்டிக்கு நடுவே மைதானத்தில் மோதிக் கொண்ட கோலி - ஸ்டோக்ஸ்..! என்ன நடந்தது..? வைரல் வீடியோ..



Virat Kohli and Ben Stokes involve in furious

இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி மற்றும் இங்கிலாந்து அணி வீரர் ஸ்டோக்ஸ் இருவரும் மோதிக்கொண்ட காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடிவருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றநிலையில் அடுத்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இரண்டு அணிகளும் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நேற்று ஆரம்பமானது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 205 ரன்களில் ஆட்டம் இழந்தது. அதனை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது.

இந்நிலையில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்துவிட்டுருந்த போது13 ஆவது ஓவரை சிராஜ் வீசினார். இந்த ஓவரின் இறுதி பந்து பவுன்சராக சென்ற நிலையில், அதனை எதிர்கொண்ட பென் ஸ்டோக்ஸ், அந்த பந்தை அடிக்காமல் தவிர்த்தார். இதனை அடுத்து சிறிது நேரத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி மற்றும் ஸ்டோக்ஸ் இடையே வார்த்தை போர் வெடித்து, இருவரும் மைதானத்திலையே காரசாரமாக விவாதிகொண்டனர்.

இதனை பார்த்த நடுவர்கள் அங்கு வந்து இருவரையும் சமாதானம் செய்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் விராட்கோலி - ஸ்டோக்ஸ் இடையே மோதல் நடக்க என்ன காரணம் என்பது குறித்து சிராஜ் தற்போது விளக்கமளித்துள்ளார்.

தான் ஓவரை வீசிவிட்டு பீல்டிங் சென்றபோது, பேட்டிங் செய்துகொண்டிருந்த ஸ்டோக்ஸ் என்னை சீண்டும் வகையிலான வார்த்தைகளை பேசினார். இதுகுறித்து நான் கேப்டன் விராட்கோலியிடம் தெரிவித்தேன். உடனே அவரும் ஸ்டோக்சிடம் விளக்கம் கேட்க சென்றார். அப்போதுதான் நடுவர்கள் வந்து சமரசம் செய்ததாக விளக்கமளித்துள்ளார்.