விளையாட்டு

விராட் கோலியின் வீட்டில் ஏற்பட்ட திடீர் இழப்பு - சோகத்தை ட்விட்டரில் பகிர்ந்துகொண்ட விராட்!

Summary:

Virat kholis dog passed away

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் செல்லப்பிராணியான புரூனோ என்ற நாய் இறந்துவிட்டதாக விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விராட் கோலி பிரபல திரைப்பட நடிகையான அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அனுஷ்கா மற்றும் கோலி இருவருமே செல்லப்பிராணிகள் வளர்ப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள்.

இவர்கள் தங்கள் செல்லப்பிராணிகளுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பகிர்வது வழக்கம். ஆனால் தற்போது விராட் கோலி தனது செல்லப்பிராணி குறித்த சோகமான தகவலினை பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், 11 வருடங்களாக தனது வீட்டில் வளரந்த புரூனோ என்ற நாய் இறந்துவிட்டதாக பதிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கோலியின் இந்த இழப்பிற்கு ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement