நேற்றைய ஆட்டத்தில் தன்னையே மறந்து நின்ற கேப்டன் விராட்.! அடுத்த நிமிடமே பதறிப்போய் சாரி கேட்ட விராட் கோலி.! வைரல் வீடியோ.!virat-kholi-say-sorry-yesterday-match

14-வது ஐபிஎல் சீசனின் 16-வது ஆட்டம் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதியது. 

நேற்றைய ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி பின்னால் சென்று நின்று கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. டாசிஸ் வெற்றி பெற்ற விராட் அதை நம்பாமல் பின்னால் சென்று நின்றுக் கொண்டார். அவரால் டாஸ் வெற்றியை நம்ப முடியவில்லை. 


இதனையடுத்து சஞ்சு சாம்சன் மைக்கை பிடித்து பேசவந்தார். பின்னர், தன்னை உணர்ந்து மீண்டும் வந்து சாரி, நான் தான் டாஸ் வென்றேன் என்று தொடர்ந்து பேச ஆரம்பித்தார். இதனால் அந்த இடம் பரபரப்புக்கு உள்ளானது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நேற்றைய போட்டியில் ஆர்.சி.பி 16.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.