விடை பெறுகிறேன்!! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட விராட்கோலி!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

விடை பெறுகிறேன்!! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட விராட்கோலி!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..


Virat Kholi resigned test captaincy

இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் விராட்கோலி.

கடந்த பல ஆண்டுகளாக இந்திய அணியை சிறப்பாக வழிநடத்திவந்த விராட்கோலி, சமீபத்தில் T20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். வந்தபின்னர் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விராட்கோலியை நீக்கிவிட்டு, ரோஹித் ஷர்மாவை கேப்டனாக நியமித்தது இந்திய கிரிக்கெட் வாரியம்.

இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் கேப்டனாக இருந்துவந்தார் விராட்கோலி. விராட்கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது தென்னாபிரிக்கா சுற்றுப்பணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியுற, 2 - 1 என்ற கணக்கில் தென்னாபிரிக்க அணி வெற்றிபெற்றது.

virat kholi

இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தான் விலகுவதாக அறிவித்துள்ளார் விராட்கோலி. இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், " ஆண்டுகள் கடின உழைப்பு, முயற்சியின் மூலம் இந்திய அணியை சரியான பாதையில் கொண்டு செல்லப்பட்டது. என்னுடைய பணியை நேர்மையாக செய்திருக்கிறேன். எதுவுமே ஒரு கட்டத்தில் முடிவுக்கு வர வேண்டும், என்னை பொறுத்தவரையில் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவி தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

மேலும், எனது கேரியரில் பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்திருக்கிறேன். ஆனால் என்றுமே அவநம்பிக்கை கொண்டிருக்கவில்லை.. நாட்டுக்காக வழி நடத்தும் பதவியை அளித்ததற்காகவும், நீண்ட காலம் அந்த பணியில் இருக்க வாய்ப்பு அளித்ததற்காகவும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இறுதியாக எம்.எஸ்.தோனி அவர்களுக்கு ஒரு பெரிய நன்றியை தெரிவிக்கிறேன். எனக்குள் இருக்கும் கேப்டனுக்கான தகுதியை கண்டறிந்து, நம்பி எனக்கு உறுதுணையாக இருந்து முன்னேற்றியவர்" என கூறியுள்ளார் விராட்கோலி.